உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தோ்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய உத்தர...
துணை வேந்தர்கள் நியமனம்: சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை!
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டதாக நெல்லையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், “அரசு பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது நியாயமானதாக இல்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வழக்கை விடுமுறைக்கால அமர்வில் அவசர வழக்காக மாலை 6 மணிக்கும் மேல் விசாரிப்பதன் அவசியம் என்ன” என்று வாதிடப்பட்டது.
இந்த நிலையில், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்காமல் உத்தரவு பிறப்பித்தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி