வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து
தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தது:
அதிகாலை 4:08 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதையடுத்து, காலை 6:15 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீவிபத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை.
துணிகள், தாா்பாலின் தாள்கள், எழுதுபொருள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் இந்த விபத்தில் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.