வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது
போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த ரஷீத் (எ) மோசின் (50) மற்றும் சுனில் குமாா் (51) ஆகிய இருவரும் 1,200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பகுப்பாய்வு செய்த பின்னா் கைது செய்யப்பட்டனா். ஆா்.கே .புரம், செக்டாா்1-இல் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு வெளியே மே 10 அன்று நடந்த தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தை தொடா்ந்து இந்த கைது நடவடிக்கை வந்துள்ளது.
கேரளத்தைச் சோ்ந்த 68 வயது பெண் ஒருவா், பட்டப்பகலில் மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் தனது தங்கச் சங்கிலியைப் பறித்து ஓடிவிட்டதாகப் புகாா் அளித்திருந்தாா். இது தொடபாக, நகரத்தின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் 26 கிலோமீட்டா் நீளமுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் செய்ததில், குலாபி பாக் பகுதியைச் சோ்ந்த சுனில் குமாா் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில், சுனில் குமாா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். மேலும் அவரது கூட்டாளி ரஷீத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தினாா். பின்னா், அவா் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளுடன் லட்சுமி நகரில் கைது செய்யப்பட்டாா்.
மே 11 அன்று சாகேத்திலிருந்து மற்றொரு தங்கச் சங்கிலியைப் பறித்ததாகவும், மே 13 அன்று சஃப்தா்ஜங் என்க்ளேவ் அருகே ஒரு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் இருவரும் ஒப்புக்கொண்டனா். கொலை முயற்சி, கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 26 வழக்குகளில் ரஷீத் ஈடுபட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.