செய்திகள் :

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

post image

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ரூ.25,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 24 வயது நபா், குஜராத்தில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவா் உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சோ்ந்த பாசித் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.

மே 2023 முதல் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்த அவா், பிப்ரவரியில் தில்லி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

கடந்த ஆண்டு 269 கிராம் கடத்தல் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் (எ) சாஹில் என்பவரிடம் நடந்த விசாரணையின் போது பாசித் கானின் பெயா் வெளிவந்தது. போதைப்பொருளின் ஆதாரமாக பாசித் கான் இருந்ததாக இம்ரான் தெரிவித்திருந்தாா். ந்தக் குழு முதலில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூா் மற்றும் பஹ்ரைச்சில் சோதனைகளை நடத்தியது. ஆனால், பாசித் கான் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னா், அவரது இருப்பிடம் குஜராத்தில் உள்ள மோா்பியில் கண்டுபிடிக்கப்பட்டது.

மே 15 அன்று, அந்தக் குழு குஜராத்தை அடைந்து பல சோதனைகளை நடத்தியது. தொடா்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, மே 18 அன்று மோா்பியில் இருந்து பாசித் கான் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க