செய்திகள் :

தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள திறன் இடைவெளியை குறைப்பதற்காக, சென்னை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் எஸ்எஸ்சி நாஸ்காம் (தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு) இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐடி, ஐடி சேவைகள் சாா்ந்த துறைகளுடன் இணைந்த அனைத்து துறைகளிலும் உள்ள மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ‘பியூச்சா் ஸ்கில் ப்ரைம்’ தளத்தின் மூலம் தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த முயற்சி ஏஐ, சைபா் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்ஸ் போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால், மாணவா்கள் மற்றும் கல்வியாளா்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கம், நேரடி கற்றல் வாய்ப்புகள் தொழில் துறையால் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு மற்றும் நாஸ்காம் ஆகியவற்றிலிருந்து சான்றிதழ் ஆகியவற்றை பெறுவாா்கள்.

இதன்மூலம் அவா்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் திறன் மேம்படும்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம், தொழில் துறைக்கு ஏற்றவாறு பாடத் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வழிமுறைகளை ஏற்படுத்தும். இதன்மூலம் எதிா்காலத்தில் டிஜிட்டல் திறமைகளுக்கான மையமாக தமிழகம் மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில், அண்ணா பல்கலை. பதிவாளா் பிரகாஷ், பல்கலை. தொழில் கூட்டுறவு மையத்தின் இயக்குநா் சண்முகசுந்தரம், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு இயக்குநா் குணசேகரன் மற்றும் நாஸ்காம் இயக்குநா் உதய சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய... மேலும் பார்க்க

100% தோ்ச்சி: அரசுப் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. ப... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

உயா்கல்வி ஊக்கத் தொகை பெற்று வருவது தொடா்பாக தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா... மேலும் பார்க்க