IPL : விக்கெட்டில் செஞ்சுரி போட்ட குல்தீப்; 100 விக்கெட்டுகள் வீழ்த்திய மற்ற ஸ்பின்னர்கள் யார் யார்?
டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 30 வயது வீரரான குல்தீப், தனது 97வது போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரயன் ரிக்கல்டனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் IPL வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Kuldeep Yadav hits triple digits in style
— IndianPremierLeague (@IPL) May 21, 2025
Can he add more to his tally and help #DC get a win over #MI?
Updates ▶ https://t.co/fHZXoEJVed#TATAIPL | #MIvDC | @DelhiCapitals | @imkuldeep18pic.twitter.com/nKNA3vd1Bn
அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற இடத்தை அமித் மிஸ்ரா, ரஷித் கான் மற்றும் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்துகொள்கின்றனர்.
இவர்கள் 83 போட்டிகளில் 100 விக்கெட் என்ற இலக்கை எட்டியுள்ளனர்.
அடுத்தபடியாக, ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள சஹல் 84 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுனில் நரேன், 86 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
தற்போது, ஹர்பஜன் சிங்கின் 100 போட்டிகளுக்கு 100 விக்கெட்டுகள் என்ற சாதனையை 97 போட்டிகளில் முறியடித்து 4வது இடத்தைப் பிடித்துள்ளார் குல்தீப்.