செய்திகள் :

Mumbai Indians : `இதுதான்டா MI' - களம் 8 -ல் எப்படி கம்பேக் கொடுத்தது மும்பை அணி?

post image

'கம்பேக் கொடுத்த மும்பை!'

மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப்ஸில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. சீசனின் தொடக்கத்தில் அந்த அணியின் மீது நம்பிக்கையே இல்லை. மிக மோசமாக சீசனைத் தொடங்கியிருந்தார்கள். சென்னையோடு புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்துக்கு அடித்துக் கொண்டிருந்தார்கள்.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

இப்போது ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றுவிட்டார்கள். முதல் இரண்டு இடங்களுக்குள் முடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இப்படி ஒரு அசாத்திய கம்பேக்கை எப்படி சாத்தியப்படுத்தியது மும்பை?

கடந்த சீசன் மும்பைக்கு மிக மோசமான சீசன். ரோஹித்திடமிருந்து கேப்டன்சி ஹர்திக்கின் கைக்கு வந்ததால் ரசிகர்களின் ஆதரவும் அணிக்கு இல்லை. இவர்களும் ஒரு அணியாக ஆடியிருக்கவில்லை. ரொம்பவே சொதப்பியிருந்தார்கள். அங்கே விட்ட இடத்திலிருந்துதான் இந்த சீசனைத் தொடங்குகிறார்களோ என்று தோன்றியது.

Hardik Pandya
Hardik Pandya

'மோசமான தொடக்கம்!'

ஏனெனில், முதல் 5 போட்டிகளில் ஒன்றை மட்டுமே வென்றிருந்தனர். அந்த 5 போட்டிகளில் 3 போட்டிகள் அவே போட்டிகள் 2 போட்டிகள் உள்ளூர் போட்டிகள். சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியிலேயே சென்னை அணியிடம் அடி வாங்கினார்கள். அடுத்து அஹமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத்திடம் அடி வாங்கினார்கள். மூன்றாவது போட்டியில்தான் வென்றார்கள். வான்கடேவில் கொல்கத்தாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் அவர்களை சிறிய ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தி வென்றார்கள்.

இந்த வெற்றி சீரானதாக இல்லை. லக்னோ மற்றும் பெங்களூருவுக்கு எதிரான அடுத்தடுத்தப் போட்டிகளில் தோல்வியையே தழுவினர். இந்த முதல் 5 போட்டிகளில் மும்பை டச்சிலேயே இல்லை. 4 போட்டிகளில் பும்ரா இல்லை. ரோஹித் பார்மில் இல்லை. இடையில் ஒரு போட்டியில் காயம் காரணமாக ஆடாமலும் இருந்தார். திலக் வர்மா ரிட்டையர் அவுட்டெல்லாம் ஆக வைத்திருந்தார்கள். லக்னோவுக்கு எதிரான போட்டியில் இன்டன்ட்டே இல்லாமல் தோற்றிருந்தார்கள்.

Hardik Pandya
Hardik Pandya

பெங்களூருவுக்கு எதிரான 5 வது போட்டியிலிருந்துதான் மும்பை வேகமெடுக்க ஆரம்பித்தது. அந்தப் போட்டியில் 200+ சேஸ். போட்டியை வெல்லவில்லை. ஆனால், ஒரு இன்டன்ட் காட்டியிருப்பார்கள். 280 ஸ்ட்ரைக் ரேட்டில் 42 ரன்களை எடுத்து போட்டியை நெருக்கமாகக் கொண்டு சென்றிருப்பார். அடுத்து டெல்லிக்கு எதிரான போட்டி. அந்தப் போட்டியில்தான் மும்பை பார்முக்கே வந்தது.

'அந்த ஒரு போட்டி...'

முதலில் பேட் செய்த மும்பை அணி 205 ரன்களை எடுத்திருந்தது. ரையான் ரிக்கல்டன், சூர்யா, திலக் வர்மா, நமன் தீர் என மிடில் ஆர்டர் மொத்தமாக ஃபயர் ஆகியிருந்தது. ஆனாலும் போட்டி அவ்வளவு எளிதாக மும்பை பக்கமாக வரவில்லை. டெல்லிக்காக கருண் நாயர் கம்பேக் கொடுத்தார். கிட்டத்தட்ட 13 ஓவர்கள் வரைக்கும் போட்டி டெல்லியின் கையில்தான் இருந்தது. அதன்பிறகுதான் ட்விஸ்ட் நடந்தது.

Mumbai Indians
Mumbai Indians

இம்பாக்ட் ப்ளேயராக கரண் சர்மாவை அழைத்து வந்தார்கள். வந்த வேகத்தில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டி அப்படியே மாறத் தொடங்கியது. டெத் ஓவரிலெல்லாம் மும்பையின் அத்தனை வீரர்களும் வெறியோடு இருந்தனர். கடைசி ஓவரில் மட்டும் 3 ரன் அவுட்கள். மும்பை அணி அந்தப் போட்டியை த்ரில்லாக வென்றது. அங்கே ஏறியதுதான் மும்பையின் கொடி. அதன்பிறகு இறங்கவே இல்லை.

'மும்பை வெற்றி பின்னணி!'

ஹோம் அட்வாண்டேஜை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். எதிரணிக்கு ஏற்றார் போல பிட்ச்களை மாற்றி மாற்றி பயன்படுத்தினார்கள். சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் முழுக்க முழுக்க பௌலர்களுக்கு சாதகமான ஒரு பிட்ச்சை கொடுத்து அவர்களை 160 ரன்களுக்குள் சுருட்டி வென்றார்கள். அடுத்தப் போட்டியிலேயே சென்னைக்கு எதிராக பேட்டிங் பிட்ச்சை போட்டு 15 ஓவர்களிலேயே சேஸிங்கை முடித்து ரன்ரேட்டை ஏற்றிக்கொண்டார்கள்.

இந்தக் கட்டத்தில் ட்ரை சீரிஸ் போல ஒரு சூழலும் ஏற்பட்டது. அதாவது சென்னை, மும்பை, ஹைதராபாத் இந்த மூன்று அணிகளுக்குள்தான் அடுத்தடுத்து போட்டி இருந்தது. அதில் நன்றாக ஆடி வெல்பவர்கள்தான் ப்ளே ஆப்ஸில் நீடிக்க முடியும் எனும் நிலை. மும்பைதான் இந்த ரேஸில் முன்னிலை வகித்தது.

ரோஹித் பார்முக்கு வந்துவிட்டார். பெரிய இன்னிங்ஸ்களை ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றார். ரிக்கல்டன் நல்ல மொமன்ட்டம் கொடுக்க ஆரம்பித்தார். சூர்யா நல்ல பார்மில் இருந்தார். எல்லா போட்டிகளில் 25+ ரன்களை அடித்துக்கொண்டே இருந்தார். ரிட்டையர் அவுட் ஆன பிறகு, ஒரு வெறியில் திலக் வர்மா ஆட ஆரம்பித்தார். ஹர்திக் லோயர் மிடில் ஆர்டரில் வலுவாக இருந்தார்.

Mumbai Indians
Mumbai Indians

சஹாரும் போல்ட்டும் சில போட்டிகளில் பவர்ப்ளேயிலேயே எதிரணியை காலி செய்தனர். பும்ரா விக்கெட்டுகள் எடுத்ததோடு எக்கனாமிக்கலாகவும் வீசியிருந்தார். எக்கானமி 6 யை சுற்றித்தான் இருந்தது. சாண்ட்னர் ஸ்பின்னில் மாஸ்டர் க்ளாஸ் நடத்தினார். பேட்டிங்கில் சூர்யாவைச் சுற்றி மற்ற அனைவரும் கணிசமான பங்களிப்புகளைக் கொடுக்கின்றனர். பௌலிங்கில் பும்ராவைச் சுற்றி மற்ற பௌலர்கள் கலக்குகின்றனர்.

அந்த டெல்லி போட்டியிலிருந்து கரண் சர்மா, ட்ரென்ட் போல்ட், வில் ஜாக்ஸ், ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் என ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்கள். வில் ஜாக்ஸ் மட்டும்தான் 2 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். மும்பை அணியின் சிறந்த பேட்டர் சூர்யகுமார்தான். ஆனால், அவரே 13 வது போட்டியில்தான் முதல் முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்தளவுக்கு மும்பை அணியின் எல்லா வீரர்களும் வெற்றியில் பங்களிப்பு செய்து வந்தனர்.

Rohit Sharma
Rohit Sharma

அந்த டெல்லி போட்டிக்குப் பிறகு தொடர்ச்சியாக எல்லாமே வெற்றிதான். இடையில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டதால் நெருங்கி வந்து தோற்றிருந்தனர்.

சீசனை மோசமாகத் தொடங்குவதும், அதன்பிறகு கம்பேக் கொடுப்பதும் மும்பைக்கு ஒன்றும் புதிதல்ல. 'Deliver when it's matters' என்பார்கள். மும்பை அணியினர் அதில் கைதேர்ந்தவர்கள். ப்ளே ஆப்ஸில் இருக்கும் மற்ற 3 அணிகள்தான் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

MI - யின் வெற்றிக்குக் காரணமாக நீங்கள் நினைக்கும் விஷயத்தைக் கமென்ட்டில் சொல்லவும்.

Dhoni: "நான் தோனியாக இருந்தால் இதுவே போதும் என்பேன்" - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பளீச்

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாகச் செயல்பட்ட சீசன்களில் ஒன்றாக இந்த 18-வது சீசன் அமைந்திருக்கிறது.2008 முதல் 2019-ம் ஆண்டு சீசன் (2016, 2017 தடைக் காலம்) வரை தொடர்ச்சியாக ஆடிய 10... மேலும் பார்க்க

Shreyas Iyer: புறக்கணிப்பின் வலி... வெற்றி - `ஸ்ரேயஸ்’ எனும் கேப்டன்!

கடந்த மார்ச் 25 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டி அது. சுயநலமாகத் தன்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல் அந்தப் போட்டியில் அணிக்காக விளையாடிய கேப்டன் ஒருவரின் செயல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த... மேலும் பார்க்க

IPL : விக்கெட்டில் செஞ்சுரி போட்ட குல்தீப்; 100 விக்கெட்டுகள் வீழ்த்திய மற்ற ஸ்பின்னர்கள் யார் யார்?

டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 30 வயது வீரரான குல்தீப், தனது 97வது போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். நேற... மேலும் பார்க்க

MI: 'என் மனைவிக்காகதான் இந்த அவார்ட்...' - ஆட்டநாயகன் சூர்யகுமார்

'ஆட்டநாயகன் சூர்யகுமார்!'மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியை வென்றதன் மூலம் மும்பை அணி ப்ளே ஆப்ஸூக்கும் தகுதிப்பெற்றிருக்கிற... மேலும் பார்க்க

MI vs DC: `நாங்க வர்றோம்' - சூர்யாவின் பக்குவம்; சாண்ட்னரின் மாஸ்டர் க்ளாஸ் - ப்ளே ஆப்ஸில் மும்பை

'மும்பை வெற்றி!'டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. சூர்யாவின் பக்குவமான பேட்டிங்காலும் சாண்ட்னரின் அற்புதமான பௌலிங்காலும் இதை சாதித்திருக்கி... மேலும் பார்க்க

Preity Zinta: `நான் ராஜஸ்தான் அணி இளம் வீரரை கட்டிப்பிடித்தேனா?' - ஆத்திரமான நடிகை பிரீத்தி ஜிந்தா

இந்தியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டப் படம் 'உயிரே'. இந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் பிரீத்தி ஜிந்தா. இந்த ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகையாகி, தொடர்ந்து இந்திப் படங்களில் ந... மேலும் பார்க்க