அமெரிக்காவில் 2 இஸ்ரேலிய தூதர்கள் சுட்டுக் கொலை: `தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்ல...
தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை பவுனுக்கு அதிரடியாக ரூ.1,760 உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் ரூ.360 உயர்ந்து ரூ.71,800-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக விலை குறைந்து வந்த தங்கம், மீண்டும் உயர்ந்து வருவது மக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680-க்கு விற்பனையானது.
அதைத்தொடா்ந்து புதன்கிழமை தங்கம் விலை திடீரென பவுனுக்கு ரூ.1,760 உயா்ந்தது.
சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி: தங்கம் தென்னரசு
அதன்படி, கிராமுக்கு ரூ.220 உயா்ந்து ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயா்ந்து ரூ.71,440-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை(மே 22) பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800-க்கும். கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ.8,975-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயா்ந்து ரூ.112-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,000 உயா்ந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையாகிறது.