வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்
சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை குடிநீா் பிரச்னை குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மேயா் இ.சங்கீதா தலைமை வகித்தாா். ஆணையா் கே.சரவணன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் பாலசங்கா், உஷாநந்தினி, முருகேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினா்கள் கூறியதாவது: சிவகாசி மாநகராட்சியில் 2017-2018-ஆம் ஆண்டில் தாமிரவருணி கூட்டுக்குடி நீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. வீடுகளுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் மூலம் முழுமையாக குடிநீா் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
எனவே, விரைவில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தை மாநகராட்சிப் பகுதி முழுமையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.