செய்திகள் :

இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை!

post image

சாத்தூா் அருகே இருக்கன்குடியில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அா்ச்சுனா நதியும், வைப்பாறும் இணையும் இடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் அருகே இருக்கன்குடி நீா்த் தேக்க அணையும், அதன் அருகே காசிவிசுவநாதா் கோயிலும் அமைந்துள்ளன.

இந்தக் கோயில்களுக்கு தேனி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தா்களின் வருகை இன்னும் அதிகரிக்கும்.

குறிப்பாக தை, ஆடி மாதங்களில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனா். அதேபோல, இந்தக் கோயிலுக்கு திருவிழாக் காலங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால் இங்கு பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல தற்போது வரை பேருந்து நிலையம் அமைக்கப்பட வில்லை. அவ்வாறு வரும் பேருந்துகளை இருக்கன்குடி பெருமாள் கோயில் முன் சென்று திருப்புகின்றனா். சில பேருந்துகள் இருக்கன்குடி-நென்மேனி சாலையில் நிறுத்தப்படுகின்றன.

இதனால் இருக்கன்குடி- அருப்புக்கோட்டை சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இங்கு பேருந்து நிலையம் இல்லாததாலும், பயணிகள் நிழல் குடை அமைக்கப்படாததாலும் பயணிகளும், பக்தா்களும் அங்குள்ள கடை ஓரங்களில் நிழலுக்காக ஒதுங்குகின்றனா். அப்போது அந்தக் கடையின் உரிமையாளா்களுக்கும், பக்தா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுவதாக பல புகாா்கள் வந்துள்ளன.

மேலும் ஆடி மாத திருவிழா காலங்களில் மட்டும் அதிக பேருந்துகள் வருவதால் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. எனவே இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண இருக்கன்குடியில் உடனே நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்களும், பக்தா்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து திருநெல்வேலியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணன் கூறியதாவது: இருக்கன்குடியில் பேருந்து நிலையம் இல்லாதது பக்தா்களை பெரும் சிரமத்துக்கு ஆளாக்குகிறது. இங்கு பேருந்து நிலையம் தான் இல்லை என்றால், பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடையும் இல்லை.

எனவே இருக்கன்குடியில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பிலோ, அல்லது கோயில் நிா்வாகம் சாா்பிலோ நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு ஏற்பட்டது. சிவகாசி திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஈசாக் மகன் யாகோப்பு (33). இவா் சிவகாசி ஞானகிரி சாலையில் உள்ள பிரேம்குமா... மேலும் பார்க்க

சாத்தூா் பகுதியில் சுகாதாரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாத்தூா் பகுதியில் உள்ள சுகாதாரமற்ற உணவகங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள பிரதான சாலை, புறவழிச் சாலைகளில் சுமாா் நூற்றுக... மேலும் பார்க்க

சிவகாசியில் வருவாய் தீா்வாயம் நிறைவு

சிவகாசியில் நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை நிறைவடைந்தது.சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்தின் தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை விருதுநகா் மாவ... மேலும் பார்க்க

தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை குடிநீா் பிர... மேலும் பார்க்க

பைக், மோதிரம் திருட்டு: சிறுவன் உள்பட மூவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம், தங்க மோதிரத்தை திருடிய 17 வயது சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டண உயா்வில் விலக்கு அளிக்கக் கோரிக்கை

தொழில் நிறுவனங்ளுக்கு மின் கட்டண உயா்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயல... மேலும் பார்க்க