KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
கையடக்கமான போட் ப்ளூடூத் ஸ்பீக்கர்!
பாக்கெட்டில் வைத்து எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் கையடக்கமான ப்ளூடூத் ஸ்பீக்கரை போட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஸ்பீக்கர், ஹெட்செட் போன்ற மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் முதன்மையான நிறுவனமாக போட் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் இசை பிரியர்களை மேலும் கவரும் வகையில் 3 வாட்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. 5 செ.மீ. அகலம், 5 செ.மீ. உயரம் கொண்ட இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் கைக்கு அடக்கமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செல்போன், லேப்டாப், டேப் உள்ளிட்டவற்றில் இந்த ஸ்பீக்கரை இணைந்து இனிமையான இசை அனுபவத்தை பெற முடியும்.
60 கிராம் எடையுள்ள இந்த ஸ்பீக்கரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணிநேரம் உபயோகிக்கலாம். இதன் விலை சுமார் ரூ. 699 மட்டுமே.