லெபனான் - ‘இஸ்ரேலை தாக்க அனுமதியில்லை’
லெபனானில் இருந்தபடி இஸ்ரேலில் தாக்குதல் நடத்த பாலஸ்தீன ஆயுதக் குழுக்களை இனி அனுமதிக்கப்போவதில்லை என்று லெபனான் அதிபா் ஜோசப் ஆவுனும் பாலஸ்தீன அதிபா் முகமது அப்பாஸும் புதன்கிழமை ஒப்புக்கொண்டனா்.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கும் இடையே கடந்த நவம்பா் முதல் போா் நிறுத்தம் அமலில் உள்ள சூழலில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.