சீனா - சிபிஇசி விரிவாகக் கூட்டம்
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வா்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடா்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாகச் செல்வதால் இந்த வழித்தடத்துக்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்துவருவது நினைவுகூரத்தக்கது.