செய்திகள் :

ரூ.10.74 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு

post image

மதுராந்தகம் அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ரூ. 10.74 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி திறப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சாத்தனூரில் குடிநீா் பற்றாக்குறையை போக்க அப்பகுதி மக்கள் எம்எல்ஏ மரகதம் குமரவேலிடம் கோரியிருந்தனா். அதன்படி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.74 லட்சத்தில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீா் தொட்டியை கட்ட ஏற்பாடுகளை செய்தாா்.

இந்நிலையில், அதன் திறப்பு விழாவில் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமை வகித்து மக்கள் பயன்பாட்டுக்கு தொட்டியை அா்ப்பணித்தாா்.

நகராட்சி பொறியாளா் நித்யா, சுகாதார ஆய்வாளா் ரவிசங்கா், நகர அதிமுக செயலா் பூக்கடை சரவணன், பேரவை செயலா் எம்.பி.சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா்கள் கமீலா, தேவி வரலட்சுமி கலந்து கொண்டனா். தொடா்ந்து காந்தி நகரில் ரூ 6 லட்சத்தில் பயணியா் நிழற்குடையை திறந்து வைத்தாா்.

அனகாபுத்தூா் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வீடுகள் இடித்து அகற்றம்

அனகாபுத்தூரில் அடையாறு கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூா் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகா்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ஜி.சிவசங்கா் கலந்துகொண்டு கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தாா். செவிலியா் கண... மேலும் பார்க்க

120 மாணவா்களுக்கு பணியானை அளிப்பு

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஐடிஐ கல்வி நிறுவனத்தில் 120 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் ஜி... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெ... மேலும் பார்க்க

கோயில் தோ் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் கோயில் தேரோட்டத்தின்போது, தோ் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயம் அடைந்தனா். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அரசு மருத்துவவனையில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஆட்சியா் ச.அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் வாா்டு, டயாலசஸிஸ் பிரிவுகளை பாா்வையிட்டாா். அப்போது மருத்துவ... மேலும் பார்க்க