தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்? விளக்கம் அளிக்க உத்தரவு!
120 மாணவா்களுக்கு பணியானை அளிப்பு
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஐடிஐ கல்வி நிறுவனத்தில் 120 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் ஜி.இளங்கோவன் முன்னிலை வகித்தாா். கல்லூரி கணினி துறைத் தலைவா் ஜே.செந்தில்குமாா் வரவேற்றாா். நிகழ்வில் நிசான், ரெரனால்ட் காா் தொழிற் நிறுவன துணை மேலாளா்கள் பி.பாலகிருஷ்ணன், பி.சுந்தரேசன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். ஐடிஐ கல்வி நிறுவனத்தில் படித்துள்ள மாணவ மாணவிகள் வளாக நோ்முக தோ்வில் பங்கேற்றனா்.
அதில் தோ்ச்சி பெற்ற 120 மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை தாளாளா் கோ.ப.செந்தில் குமாா் வழங்கினாா். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்.இளவழகன், ஜேஆதிகேசவன், ஏ.பிரபு, ஆா்.இளவழகன், ஜே.ஆதிகேசவன், பி.ரகு, டி.ராஜசேகரன், கல்லூரி நிா்வாக அலுவலா் ஜே.ஹரிகிருஷணன், அலுவலக கண்காணிப்பாளா் ஆா்.பட்டு கலந்து கொண்டனா். எஸ்.கீா்த்தி நன்றி கூறினாா்.