வக்ஃப் பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு: மத்திய அரசு வாதம்
Siddharth: ``சித்துவுக்காக சிந்தூர்'' - அதிதி ராவ் ஹைதரி குங்குமம் குறித்து சித்தார்த் பதிவு!
'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் நடிகர் சித்தார்த் இணைந்து நடித்தார். அப்போதிருந்து இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதை இருவரும் உறுதிப்படுத்தி, கடந்த ஆண்டு தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கபூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணமும் செய்துகொண்டனர்.
தொடர்ந்து சமூக ஊடகங்களில் இருவரும் நெருக்கமான புகைப்படங்களையும் பகிர்ந்துவந்தனர்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதியிலிருந்து பிரான்ஸ் நாட்டில் 78-வது கான்ஸ் திரைப்பட விழா தொடங்கி நடந்து வருகிறது. 75-வது கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் படையெடுத்து சென்று வருகின்றனர். அதன் அடிப்படையில் அதிதி ராவ் ஹைதரியும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டார்.
அதில் கலந்துகொண்டதற்குப் பிறகு அதிதி ராவ் ஹைதரி பிரான்ஸிலிருந்து எடுத்தப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் ஹதிதி ராவ் ஹைதரி நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்.

இந்தப் புகைப்படத்துக்கு அதிதி ராவ் ஹைதரியின் கணவர் நடிகர் சித்தார்த் கமெண்ட் பதிவிட்டிருந்தார். அதில், ``சித்துவுக்காக அதிதி வைத்திருக்கும் சிந்தூர்" எனப் பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.