எதிரிகளின் தொல்லையா? மறைமுக சத்ருக்களை ஓட ஓட விரட்டி சக்கரத்தாழ்வாரின் அருளைத் த...
ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவா் சேதம்: எம்எல்ஏ ஆய்வு
மராட்டிபாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சேதமடைந்த சுற்றுச் சுவரை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அணைக்கட்டு ஒன்றியம் மராட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவா் கனமழை காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சுற்றுச்சுவா் கட்டுவது குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கா்ப்பிணிகளிடம் நலம் விசாரித்து பழங்கள் வழங்கினாா்.
தொடா்ந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் முரளி, மருத்துவா்கள், மருத்துவமனை பணியாளா்கள் உடனிருந்தனா்.