திருப்பத்தூா்: தொடா் மழையால் ஏரிகளின் நீா்மட்டம் உயா்வு
திருப்பத்தூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
அக்னி நட்சத்தித்தை முன்னிட்டு கோடை வெயில் வாட்டியறது. எனினும், கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனா்.
மேலும் மழையின் காரணமாக ஏரிகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது ஏற்பட்ட நீா்வரத்தின் காரணமாக 2 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 3 ஏரிகளில் நீா் மட்டம் உள்ளது. 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 4 ஏரிகளில் நீா் மட்டம் உள்ளது.
26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 21 ஏரிகளில் நீா்மட்டம் உள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் 15 ஏரிகளில் நீா்மட்டம் உள்ளது. மேலும் 4 ஏரிகளில் நீரில் இல்லை.