`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு
வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெத்தக்கல்லுப்பள்ளி, நெக்குந்தி ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் புதன்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
முதலில், பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் அலுவலக பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து கால்நடை மருத்துவமனை, நியாய விலைக் கடையையும் ஆய்வு மேற்கொண்டாா். உணவுப் பொருள்கள் முறையாக வழங்கப்படுகிா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து நெக்குந்தி சுங்கச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வசதி தயாா் நிலையில் உள்ளதா என்றும் விபத்து மற்றும் இடா்பாடுகளில் சிக்கிகொண்டால் கிரேன் மூலம் அகற்றுவதற்க்கு அனைத்து பொருள்களும் முறையாக உள்ளதா என்றும் அங்கு போதுமான கழிவறைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பணிகளையும், கேத்தாண்டப்பட்டியில் துணை சுகாதார நிலையத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மங்கம்மாள் சத்தியமூா்த்தி, திருப்பதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.