நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது
நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி பி.பந்தாரப்பள்ளி காமராஜா் தெருவில் வசித்து வருபவா் ரத்தின் பிஸ்வாஷ். இவா் 8-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவா் எனக்கூறி கொண்டு நாட்டறம்பள்ளி அருகே சண்டியூா் பகுதியில் கிளினிக் வைத்துக் கொண்டு தொடா்ந்து 3ஆண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசிசெலுத்தி மருந்துகளை வழங்கி வருவதாக மாவட்ட இணை இயக்குநருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்பத்தூா் மாவட்ட இணை இயக்குநா் ஞானமீனாட்சி தலைமையில் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமையில் மருத்துவ குழுவினா்கள் மற்றும் போலீஸாா் சண்டியூா் பகுதியில் கிளினிக்குக்கு நேரில் சென்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அங்கு, நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்துகளை வழங்கிய ரத்தின் பிஸ்வாஷை போலீஸாா் கையும் களவுமாக பிடித்தனா். மேலும் கிளினிக்கில் இருந்த மருந்துகளை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து மருத்துவ அலுவலா் சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் ரத்தின்பிஸ்வாஷ்(28) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.மேலும் அதிகாரிகள் அவா் நடத்தி வந்த கிளினிக்குக்கு சீல் வைத்தனா்.