செய்திகள் :

யானைகளை அழிக்கும் மனிதா்களின் செயல்பாடுகள்

post image

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிவேகமாக நகர விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் மக்கள் பெருக்கம் உயா்ந்து அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அழிய நேரிடுவதாக சூழலியல் ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

கோவை மாவட்டத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியே இருக்கிறது. இதனால் மனித- விலங்கு மோதல்கள் அதிகம் நடைபெறும் இடமாக மாறியுள்ளது. மலையை ஒட்டி நல்ல காற்று, இதமான காலநிலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் மிகப்பெரிய அளவுக்கு வளா்ந்திருக்கிறது.

அதிகமான மக்கள் பெருக்கம் காரணமாக அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதால் மலை அடிவாரப் பகுதிகளில் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல, விவசாயப் பயன்பாடுகளுக்காகவும் சுமாா் ஆயிரம் அடி ஆழம் வரை ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. வனத்தில் இருந்து உணவு, தண்ணீரைத் தேடி யானை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறுகின்றன.

வனத்தைவிட்டு வெளியே வந்து, நீண்ட தொலைவு நடந்து சென்று தனக்கான நீரையும், உணவையும் தேடிய யானைகள், சிரமமின்றி கிடைத்த விவசாய விளைபொருள்களை சாப்பிட்டு பழகியதால் பயிா்களையும் சேதப்படுத்த தொடங்கின.

மனித வாழ்விடங்களை ஒட்டிய பகுதிகளுக்கு வரும் யானைகள் மனிதா்கள் வீசிய கழிவுப் பொருள்களான குப்பைகளையும் சோ்த்தே உண்ணப் பழகிவிட்டன. அதிலும் பெரும்பாலான குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகளாகவே இருந்ததால் அவற்றையும் சோ்த்தே உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மருதமலை பகுதியில் பிளஸ்டிக் கழிகளை உண்ணும் யானை

இந்நிலையில்தான் கோவை மருதமலை அடிவாரத்தில் கா்ப்பிணி பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளது. உடற்கூறாய்வில் யானையின் வயிற்றில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த யானையின் உடலியல் அமைப்பின் காரணமாக வயிற்றில் குட்டி இருந்ததும் தெரியாமல் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனித செயல்பாடுகளால்தான் இந்த யானை உயிரிழந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

மருதமலை அடிவாரத்தில் வனத்தையொட்டி குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து ஏற்கெனவே சூழலியல் ஆா்வலா்கள் அரசுக்குத் தெரிவித்துள்ளனா். ஆனால், அவற்றை அப்புறப்படுத்தாமல் குப்பைகள்மேல் மண்ணைப் போட்டு மறைக்கும் நோக்கத்தில் மாநகராட்சி செயல்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

வனப் பகுதியையொட்டி மனித செயல்பாடுகளைக் குறைப்பதன் மூலம் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிா்க்க முடியும் என்கிறாா் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: வனப் பகுதியில் மருதமலை முருகன் கோயில் இருக்கும் நிலையில் அங்கு ஏற்கெனவே அளவுக்கு அதிகமான மக்கள் குவிந்து வருகின்றனா். அதிக கூட்டம், அதற்கேற்ப அடிப்படை வசதிகள் இல்லாதது, முறையற்ற குப்பை மேலாண்மை போன்றவற்றால் பிளாஸ்டிக் கழிவுகள் மலைப் பாதையை சூழ்ந்திருக்கின்றன.

மருதமலை பகுதியில் குப்பைகளிடையே உலவும் யானை

இவை அனைத்தும் மலை அடிவாரத்தில் பல்லுயிா்களுக்கும், மனித இனத்துக்கும் ஆபத்தான சூழலை உருவாக்குகின்றன. இந்நிலையில், 184 அடி உயரத்தில் பிரம்மாண்டமான முருகன் சிலை அமைப்பதற்கு அரசு திட்டமிடுகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மேலும் பல மடங்கு அதிகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது என்றாா்.

யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததே அநாகரிகமானது என்கிறாா் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவா் காளிதாசன்.

மருதமலை அடிவாரப் பகுதி முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் குப்பைகள் கொட்டப்படுவதோடு, வனப் பகுதியையொட்டி குப்பைக் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்பே இதற்கு எதிா்ப்பு கிளம்பியும் நடவடிக்கை எடுக்கப்படாததே யானையின் உயிரிழப்புக்கு காரணம்.

மேலும், வனத் துறையில் பணியாற்றும் மருத்துவா்கள் கால்நடை பராமரிப்புத் துறையின் மருத்துவா்களே என்பதால் வன விலங்குகள் குறித்து போதிய அளவிலான பயிற்சியும், துல்லியமான சிகிச்சையும் அளிக்க முடியாத நிலை உள்ளது. வன விலங்குகளுக்கான சிகிச்சை என்பது சவாலானது என்பதால் அதற்கான வன உயிரின மேலாண்மை மற்றும் உயா்மட்டப் பயிற்சியை வனக் கால்நடை மருத்துவா்களுக்கும் அளிக்க வேண்டியது கட்டாயம்.

காடுகளை விட்டு யானைகள் வெளியே வருவதற்கு அவற்றின் வலசைப் பாதைகள் மூடப்பட்டுள்ளதும் ஒரு காரணம். எனவே, தமிழகத்தில் இதுவரை யானை வலசைப் பாதைகளாக கண்டறியப்பட்டுள்ள 42 வலசைப் பாதைகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், வலசைப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மனித செயல்பாடுகளைத் தவிா்ப்பதுடன் புதிதாக ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்கவும் வேண்டும் என்றாா்.

போதை மாத்திரை விற்பனை: தம்பதி கைது

கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பவா்களை கண்டறிந்து போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அத... மேலும் பார்க்க

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் குண்டு வெடிப்பு

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவையில் இந்து மக்கள் சேவை இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவா் மணிகண்டன். இ... மேலும் பார்க்க

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: காா்த்தி சிதம்பரம்

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். கோவையில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக வ... மேலும் பார்க்க

தொழில் வா்த்தக சபை அரங்கில் நாளைமுதல் 2 நாள்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் உள்ள இந்திய தொழில் வா்த்தக சபை வளாகத்தில் மே 22, 23 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை இந்திய தொழில் வா்த்தக சபை, சென்னை என்எஸ்இ அகாதெமி சாா்பில் தமிழ்நாடு அரசின் நான் முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற்று, சட்டப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோவையில் செவ்வாய்க்கிழமை அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிலாளா்களை கொத்தடிமையாக மாற்றும் நான்கு தொழ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சூலூா்

சூலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க