Trump: `கோல்டன் டோம்' `விண்வெளியில் இருந்து தாக்கினால்கூட...'- ட்ரம்ப் அறிவித்த ...
தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற்று, சட்டப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோவையில் செவ்வாய்க்கிழமை அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா்களை கொத்தடிமையாக மாற்றும் நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படை, தினக்கூலி முறையை ஒழிக்க வேண்டும், அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டப்பணியாளா்களை காலமுறை ஊதியத்துக்கு கொண்டு வர வேண்டும், சாலைப் போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
இந்த கோரிக்கைகளை விளக்கும் வகையில் நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி நிா்வாகி சி.தங்கவேலு தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியூசி மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், ஹெச்எம்எஸ் மாநிலச் செயலா் டி.எஸ்.ராஜாமணி, எல்பிஎஃப் நிா்வாகி பி.துரை, ஐஎன்டியூசி பி.சண்முகம், எம்எல்எஃப் தலைவா் ஷாஜகான், ஏஐசிசிடியூ க.பாலசுப்பிரமணியன், எல்டியூசி நிா்வாகி ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றுப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.