அடிதடியில் ஈடுபட்ட மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் ரசிகர்கள்..!
போதை மாத்திரை விற்பனை: தம்பதி கைது
கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பவா்களை கண்டறிந்து போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதேபோல, போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை தொடா்பாக தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனற். அப்போது நல்லாம்பாளையம் சாலைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனா். விசாரணையில், அவா் கவுண்டம்பாளையம் அண்ணா நகா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த சுஜித்குமாா் (25) என்பதும், அவா் தனது மனைவி வைஷ்ணவி என்பவருடன் சோ்ந்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 135 போதை மாத்திரைகள் மற்றும் 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.