செய்திகள் :

ஒரு மாதமாகியும் பஹல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

post image

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகும் நிலையில், பயங்கரவாதிகள் கைது செய்யாதது குறித்தும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கூட்டாதது குறித்தும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளை ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார்.

அவர் பேசியதாவது:

”வெளிநாடுகளுக்கு எம்பிக்களை அனுப்பி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எடுத்துரைக்கும் நிகழ்வானது, பிரச்னைகளை திசைதிருப்பும் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தி.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள், சீனா மற்றும் பாகிஸ்தான் பற்றிய உண்மையான பிரச்னைகளை நாங்கள் எழுப்பி வருகிறோம். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டாதது ஏன்?

பஹல்காம் தாக்குதல் நடந்தது முதல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தக் கோரினோம். ஆனால், பிரதமரின் பங்கேற்பில்லாமல் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடந்துள்ளது. அரசியல் ரீதியில் எழும் பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க கார்கேவும் ராகுலும் தொடர்ந்து மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

இதனிடையே சீன விவகாரம் தொடர்பாக பிரச்னை எழுப்பியபோது, சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்து திசைதிருப்பினார்கள்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கும் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அரசு அறிவித்தது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ராகுல் காந்தி ஆக்ஸிஜன் அளிப்பதாக பாஜக எம்பி சம்பித் பத்ராவின் விமர்சனத்துக்கு பதிலளித்த ரமேஷ் ஜெய்ராம்,

”பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடித்தாக வேண்டும். பாகிஸ்தானுக்கு சீனா ஆக்ஸிஜன் வழங்குகிறது. சீனாவின் உதவி இல்லாமல் பாகிஸ்தானால் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது.

ஜின்னாவை புகழ்ந்தது ஜஸ்வந்த சிங், லாகூர் பேருந்து யாத்திரையில் பங்கேற்றது வாஜ்பாயி, நவாஸ் ஷெரீஃபுடன் உணவு அருந்தியது மோடி.

தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆகிறது. பஹல்காம் பயங்கரவாதிகள் எங்கே? இதுவரை ஏன் பிடிக்கவில்லை? எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை!

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த க... மேலும் பார்க்க

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ... மேலும் பார்க்க

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க