செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

post image

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அப்போது ஓர் அறையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூன்று மாநில உயா்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு, குற்றச்சாட்டை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

இதைத்தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி விலகுமாறு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால் பதவி விலக நீதிபதி வா்மா மறுத்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா பரிந்துரை வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், யஷ்வந்த் வர்மா மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவா் மீது வழக்குப் பதிந்து குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்களை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், ”குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு தலைமை நீதிபதி அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கும் தெரியாது.

ஆகையால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசையே அணுக முடியும். அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முறையிடலாம். தற்போதைக்கு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.

மேலும், 4 மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க : வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த க... மேலும் பார்க்க

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ... மேலும் பார்க்க

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க