'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்...
ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா மாநில காவல்துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு எதிராக ஹரியாணாவின் அசோகா தனியாா் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியா் அலி கான் முகமது என்பவர் கருத்து பதிவிட்டு வந்தார்.
இது தொடா்பாக பாஜக இளைஞரணி சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான பேராசிரியரை தில்லியில் வைத்து ஹரியாணா போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பேராசிரியரின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மீறும் வகையில் இருப்பதால், ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பேராசிரியர் கைது செய்யப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க ஹரியாணா மாநில காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பேராசிரியர் அலி கானுக்கு புதன்கிழமை காலை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இருப்பினும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஐஜி அந்தஸ்து அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.