Virat Kohli : 'அது ஒரு அவமானம்...' - விராட் கோலியின் ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ...
சாதனைப் படைத்த மகாநதி தொடர்! குவியும் வாழ்த்து!
மகாநதி தொடர் 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி சாதனைப் படைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டும் சகோதரிகளுக்கும் அவர்களது கணவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியும் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
அதிலும், இத்தொடரில் நடிக்கும் விஜய் - காவேரிக்கு(லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) இணைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.
மகாநதி தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாநதி தொடர் 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருவதுடன் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராகவும் உள்ளது.
தற்போது உள்ள சூழலில் புதிதாகத் தொடங்கப்படும் தொடர்கள் குறுகிய காலத்தில் முடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: வள்ளியின் வேலன் தொடர்: இறுதிநாள் படப்பிடிப்பில் காதல் ஜோடி உருக்கம்!