செய்திகள் :

அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்?

post image

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில் அவர் தயாரிக்கும் பட கதாநாயகர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாம்.

டான் பிக்சர்ஸ் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை, பராசக்தி, சிம்பு - 49, இதயம் முரளி உள்ளிட்ட படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். ஒவ்வொரு படமாகத் தயாரித்து லாபம் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த படத்தைத் தயாரிப்பதுதான் வழக்கமானது.

ஆனால், வரும்போதே பிரம்மாண்டமாக அடுத்தடுத்து நட்சத்திர நடிகர்களை ஒப்பந்தம் செய்து தமிழ் சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியவர் ஆகாஷ் பாஸ்கரன்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் அதில் நடிகர் தனுஷுக்கு இட்லி கடை படத்தை இயக்கி, நடிக்க ரூ. 40 கோடியும், சிவகார்த்திகேயனுக்கு முன்பணமாக ரூ. 25 கோடியையும் சிம்புவுக்கு முன்தொகையாக ரூ. 15 கோடியும் ஆகாஷ் கொடுத்ததாக் கூறப்படுகிறது.

மேலும், சட்டவிரோத பணமாற்றம் மற்றும் முதலீடு செய்திருக்கலாம் என அமலாக்கத்துறையினர் சந்தேகப்பட்டதால் ஆகாஷ் பாஸ்கரனை விசாரிக்க சம்மன் அனுப்பினர். இன்று ஆஜராக வேண்டிய ஆகாஷ் இன்னும் ஆஜராகவில்லை. இதனால், அவர் எங்கிருக்கிறார் என்கிற விசாரணையைத் துவங்கியுள்ளனராம்.

இதற்கிடையே, நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: ஏ. ஆர். ரஹ்மான்

ரெட்ரோ ஓடிடி தேதி!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப... மேலும் பார்க்க

ஜீ தமிழ் தொடரில் நாயகனாகும் சன் டிவி நடிகர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் நடிகர் சுரேந்தர் நாயகனாக நடிக்கவுள்ளார். மலர், ஓவியா, திருமகள் உள்ளிட்ட சன் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இவர் கவனம் பெற்ற நிலையில், த... மேலும் பார்க்க

ராமன் தேடிய சீதை தொடர் திடீர் நிறுத்தம்! ரசிகர்கள் வருத்தம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமன் தேடிய சீதை தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.ராமன் தேடிய சீதை தொடர், கன்னட மொழியில் சீதா ராமன் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொட... மேலும் பார்க்க

நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

கார்த்திகை தீபம் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் தொடரில் பலதரப்பட்ட ர... மேலும் பார்க்க