வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
குஜராத்: சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 674-இல் இருந்து 891 ஆக அதிகரித்துள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கை தொடா்பான கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக மாநில முதல்வா் பூபேந்திர படேல் புதன்கிழமை கூறியதாவது:
குஜராத்தில் இதற்கு முன்பு 2020 ஜூலை மாதம் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது கிா் தேசிய பூங்கா பகுதியில் மட்டுமே 674 சிங்கங்கள் இருந்தன.
இந்நிலையில் தற்போதைய கணக்கெடுப்பில் 891 சிங்கங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 189 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 குட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.
கிா் காடுகளைத் தாண்டி சௌராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிங்கங்கள் உள்ளன. ஜூனாகத், அம்ரேலி மாவட்டங்களில் மட்டுமே கிா் காடுகள் உள்ளன. ஆனால், இப்போது அவற்றைத் தாண்டி மொத்தம் 11 மாவட்டங்களில் சிங்கங்கள் பரவி வாழ்ந்து வருகின்றன. கிா் தேசிய பூங்கா பகுதியில் 384 சிங்கங்கள் உள்ள. 507 புலிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மகிழ்ச்சி: ‘புராஜெக்ட் லயன்’ திட்டத்தின் மூலம் சிங்கங்களின் வாழ்வியலுக்கு உகந்த சூழல் உருவாக்கித் தந்து அவற்றை பாதுகாத்துள்ளோம். சிங்கங்கள் எண்ணிக்கை குறிப்பிட்டத்தக்க அளவு அதிகரிப்பது ஊக்கமளிக்கும் தகவலாக அமைந்துள்ளது’ என்று பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.