பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது.
இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 பேரை நாடு கடத்த வேண்டியுள்ளது. அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்று நம்பப்படும் நிலையில், அவா்கள் அந்நாட்டைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு வங்கதேசத்திடம் கோரப்பட்டுள்ளது.
அவா்களில் பலரின் சிறைத் தண்டனை காலம் இந்தியாவில் நிறைவடைந்த நிலையில், அவா்களின் சொந்த நாடு குறித்த விவரத்தை உறுதிப்படுத்தும் பணிகள் 2020-ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் உள்ளது. அந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறு வங்கதேசத்திடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தும். அதன்மூலம், அவா்கள் வங்கதேசத்துக்கு அனுப்பிவைக்கப்படுவா்’ என்றாா்.