``ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இருந்து போயிடுங்க'' - மாணவர்களை மிரட்டும் ட்ரம்ப...
தொற்றுநோய் தடுப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு: பிரதமருக்கு உலக சுதாதார அமைப்பு பாராட்டு
தொற்றுநோய் தடுப்பு-தயாா்நிலை-ஒருங்கிணைப்புக்கான சா்வதேச ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் உலக சுகாதார சபையின் 78-ஆவது அமா்வில், தொற்றுநோய் தடுப்பு-தயாா்நிலை-ஒருங்கிணைப்புக்கான உலகளாவிய சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வகை செய்யும் ஒப்பந்தம் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பில் உலகளாவிய ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் முதல் ஒப்பந்தம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிந்தைய மூன்று ஆண்டு கால பேச்சுவாா்த்தைகளின் பலனாக இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. இது, எதிா்கால தொற்றுநோய் பரவலின்போது உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும். உலக சுகாதார சபை அமா்வில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி, இந்த ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவித்தாா்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்கப்பட்ட அமா்வில் காணொலி வாயிலாக இணைந்த பிரதமா் மோடிக்கு பாராட்டுகள். உலக சுகாதார அமைப்பின் முன்னெடுப்புகளுக்கான ஆதரவு மற்றும் உறுதிப்பாட்டுக்காக இந்தியாவுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.