ராமன் தேடிய சீதை தொடர் திடீர் நிறுத்தம்! ரசிகர்கள் வருத்தம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமன் தேடிய சீதை தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.
ராமன் தேடிய சீதை தொடர், கன்னட மொழியில் சீதா ராமன் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழில் நேரடியாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பபு செய்யப்பட்டது. அதேபோல் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் ராமன் தேடிய சீதை தொடர் 50 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த மே 19 ஆம் தேதிமுதல்(திங்கள்கிழமை) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் சின்ன திரையில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்து ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த காலங்களில் ஒளிபரப்பான உள்ளம் கொள்ளை போகுதடா, என் கணவன் என் தோழன் உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களிடையே மிகவும்பிரபலமடைந்த தொடர்கள் ஆகும்.
ராமன் தேடிய சீதை தொடர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராமன் தேடிய சீதை தொடர் ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில், “ராமன் தேடிய சீதை ஏன் போடவில்லை. இனி போடும் எண்ணம் இருக்கிறதா? இல்லையா? நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் சீரியல் தயவுசெய்து மீண்டும் போடுங்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் இத்தொடரை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதை பரிசீலித்து ராமன் தேடிய சீதை தொடரை தொடர் குழு மீண்டும் ஒளிபரப்புமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிக்க: நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!