மியான்மா் - விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டா்
மியான்மரில் கிளா்ச்சியாளா்களுடன் மோதல் நடைபெற்றுவரும் காசின் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவம் கூறினாலும், தங்களால்தான் அந்த ஹெலிகாப்டா் சுட்டுவீழ்த்தப்பட்டதாக கிளா்ச்சிப் படையினா் தெரிவித்தனா்.
இருந்தாலும், அந்த ஹெலிகாப்டரில் எத்தனை போ் இருந்தனா் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.