செய்திகள் :

உங்கள் வீட்டுக் குழந்தைகள் பாரம்பர்ய மிட்டாய்களை சாப்பிடுகிறார்களா?

post image

''சர்க்கரை தூக்கலாக காஸ்ட்லி சாக்லேட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு உடனடி எனர்ஜியையும் உண்மையான ஊட்டச்சத்தையும் தரக்கூடியவை நம் பாரம்பரிய மிட்டாய்கள். அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம்'' என்கிற திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் உமா மகேஸ்வரி, அவற்றின் பலன்களை நமக்கு சொல்கிறார்.

கடலை மிட்டாய்
கோவில்பட்டி கடலை மிட்டாய்

கரும்புச்சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்க்கடலையையும் சேர்த்து தயாரிக்கப்படுவது கடலை மிட்டாய். வேர்க்கடலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி, உடல்சோர்வு, மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்க உதவுகின்றன. வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையைத் தவிர்க்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும்.

இதன் மூலப்பொருளே இஞ்சியும் வெல்லமும் தான். இஞ்சியில் உள்ள சத்துக்கள் உடல் வலி, குமட்டல், பசியின்மை ஆகியவற்றுக்கு நல்லது. சாப்பிட்ட பின் இஞ்சி முரப்பா மிட்டாய் சாப்பிடுவது, செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

எள்ளு மிட்டாய்
எள்ளு மிட்டாய்

கறுப்பு எள் மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படுகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்தும் எள்ளில் கால்சியமும் நிறைந்துள்ளன. இது, இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்தசோகையைப் போக்கும். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும்.

கருப்பட்டி தயாரிப்பின் கடைசியில், சுக்கு, ஏலக்காய் கலந்து சில்லுக்கருப்பட்டி தயாரிக்கிறார்கள். இதிலுள்ள கால்சியத்தால், பற்களும் எலும்புகளும் வலுவடைகின்றன. பதின் பருவப் பெண்களுக்கு சில்லுக்கருப்பட்டியில் ‘உளுத்தங்களி’ செய்து கொடுத்தால், கர்ப்பப்பை மற்றும் இடுப்பு எலும்பு வலுவடையும்.

பொரி உருண்டை
பொரி உருண்டை

கார்போஹைட்ரேட், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது; செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் இருக்கும் சுக்கு, உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது.

Donald Trump: நிருபர் கேட்ட ஒரே கேள்வி; ``உடனே வெளியே போ.." ஆத்திரத்தில் திட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன... மேலும் பார்க்க

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். நேற்று... மேலும் பார்க்க

Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல... மேலும் பார்க்க

பாபநாசம், கல்லிடைகுறிச்சி; தாமிரபரணியில் டன் கணக்கில் கழிவுகளை அள்ளி தூய்மை செய்த தன்னார்வலர்கள்!

பாபநாசம்பாபநாசம் கோயில் அருகே பரிகாரம் செய்து ஆற்றில் விடப்படும் துணிகளை அப்புறப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டல் படி, நம் தாமிரபரணி மற்றும் நெல்லை உழவாரப் பணிக் குழாம், மணிமுத்தாறு தமிழ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?

Doctor Vikatan: என்தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள். குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச்சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் கா... மேலும் பார்க்க