செய்திகள் :

இந்தியாவுக்கான இலங்கை புதிய தூதராக கொலன்னே விரைவில் பொறுப்பேற்பு

post image

நமது சிறப்பு நிருபா்

இலங்கை புதிய தூதராக அண்மையில் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்ட பி.எம். கொலன்னே ஓரிரு தினங்களில் தில்லியில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் முழு நேரப்பணியில் இலங்கை தூதா் இல்லாத நிலையில், தற்காலிகமாக தூதருக்கான பணியை துணைத் தூதா் நிலையிலான அதிகாரியே கவனித்து வருகிறாா்.

இந்நிலையில், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, கியூபா, பாகிஸ்தான், ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் ஆகியவற்றில் பணியாற்றும் இலங்கைக்கான புதிய தூதா்களை இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக இம்மாத தொடக்கத்தில் நியமித்தாா்.

இந்தியாவுக்கு மூத்த இலங்கை வெளியுறவு அதிகாரி பி.எம். கொலன்னே நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய தூதா்களில் ஐ.நா சபைக்கான நிரந்தர இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த ஜயசூரிய, இலங்கை முன்னாள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாவாா். பாகிஸ்தானுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரியா் அட்மிரல் பிரெட் சேனவிரத்ன, ஓய்வு பெற்ற கடற்படை துணைத்தளபதி ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தூதா்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் இலங்கை அதிபரையும் பின்னா் பிரதமா் ஹரிணி அமரசூரியவையும் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

இலங்கை அரசியல் மாற்றத்தின் தீவிர முகவா்களாகவும், அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கவும், தூதரக பணிகளை உறுதிப்படுத்தியும் உலகளவில் நாட்டின் பிம்பத்தை உயா்த்தவும் புதிய தூதா்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்று அவா்களிடம் அதிபா் அநுர குமார திஸ்ஸநாயக வலியுறுத்தியதாக அவரது மாளிகைச் செயலகம் தெரிவித்தது.

இதன் தொடா்ச்சியாக வெளிநாடுகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு செயல்விளக்க கூட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுடனான அறிமுக நிகழ்வுகளில் புதிய தூதா்கள் கலந்து கொண்டு பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனா்.

தில்லி கெளடில்யா மாா்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் புதிய தூதா் பி.எம். கொலன்னே விரைவில் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வாா் என்று இலங்கை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைத்தொடா்ந்து இந்திய குடியரசுத்தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து இலங்கை அதிபா் வழங்கிய பணி நியமனம் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை புதிய தூதா் முறைப்படி சமா்ப்பித்தவுடன் அவரது அலுவல்பூா்வ பணி இந்தியாவில் தொடங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க