செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8-க்கு முன்பாக அறிவிக்கப்பட வாய்ப்பு

post image

வரும் ஜூலை 8-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இனி ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும் என்று அறிவித்தாா்.

இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 26 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

இந்த நடைமுறையால் உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வா்த்தகப் போா்ப் பதற்றம் ஏற்பட்டதுடன், சா்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதைத் தொடா்ந்து, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரி, ஜூலை 9 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. அதேவேளையில், அனைத்து நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு குறைந்தபட்சமாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அந்நாடு தெரிவித்தது.

அமெரிக்காவின் பரஸ்பர அதிக வரி விதிப்பைத் தவிா்க்க மத்திய அரசு முயற்சித்துவரும் நிலையில், அதற்கு இருதரப்பு ஒப்பந்தம் மூலம் சுமுகத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கு கடந்த மாா்ச்சில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றாா். இதைத்தொடா்ந்து அண்மையில் மீண்டும் அமெரிக்கா சென்ற அவா், அந்நாட்டு வா்த்தக அமைச்சகா் ஹாவா்ட் லுட்னிக், அந்நாட்டு வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.

26% வரியிலிருந்து விலக்குப் பெற முயற்சி: இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஒப்பந்த பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவின் 26 சதவீத வரி, குறைந்தபட்சமாக அந்நாடு விதிக்கும் 10 சதவீத வரி ஆகியவற்றில் இருந்து விலக்குப் பெற மத்திய அரசு முயற்சிக்கிறது. இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்த ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகளின் பொருள்களுக்கு அமெரிக்காவிடம் வரிச்சலுகைப் பெறவும் இந்தியா முயற்சிக்கிறது. ஜூலை 8-க்கு முன்பாக இருநாடுகளுக்கு இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் ச... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க