பாப்லோ நெரூதா: ஒரு கவிதையாகப் பிறந்த நகரமும்… காதலாக வாழ்ந்த கவிஞனும்… கடல் தாண்...
தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நீதி ஆயோக் கூட்டம் மே 24-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கிய பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கூட்டத்தில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாகக் கூறி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் இந்தாண்டு பங்கேற்கவிருக்கிறார். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நீதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி தில்லி செல்கிறேன்!
சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
'பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது' என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
இன்றைக்குக்கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) May 21, 2025
சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
"பா.ஜ.க.வுடன்… pic.twitter.com/03W1rihtjv