செய்திகள் :

இறந்த யானை வயிற்றில் குட்டி யானை.. வனக் கால்நடை மருத்துவர்கள் விளக்கம்

post image

கோவையில் நேற்று இறந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி சிசுவும், பிளாஸ்டிக் கழிவுகள், புழுக்கள் இருந்ததை கண்டு வன ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், யானையின் உடல்கூறாய்வின்போதுதான், கருப்பையில் 12 முதல் 15 மாதம் மதிக்கத்தக்க ஆண் யானை சிசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யானை வயிற்றில் குட்டி இருப்பதை அறியும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்பதால் அதனைக் கண்டறிய முடியாமல் போனதாக வனக் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யானையின் கர்ப்பக் காலம் 18 முதல் 22 மாதங்கள் என்பதால், 14 மாத சிசுவைக் காப்பாற்ற முடியாமல் போனதாகவும், அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதால் நுண்ணுயிர் தாக்கி யானைக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. நுண்ணுயிர் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளுறுப்புகள் பாதித்து படிப்படியாக செயலிழந்து யானை உயிரிழந்தது. யானையின் சாணத்தில் அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன என்றும் வன கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் கடந்த நான்கு நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. யானையின் உடல் கூறாய்வு பரிசோதனையில் அதன் வயிற்றில் 15 மாத கருவுடன், பிளாஸ்டிக் கழிவுகளும் புழுக்களும் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வனத்துறையினரின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

கடந்த மே 17 - ம் தேதி பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில், தனது குட்டியுடன் மயங்கி விழுந்த தாய் யானைக்கு வனத் துறையினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். கும்கி யானையின் உதவியுடன் கிரேன் மூலம் பெல்ட்டால் தூக்கி நிறுத்தப்பட்டு, தற்காலிக தொட்டியில் நீர் நிரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம், சுகுமார், மேகமலை புலிகள் காப்பக மருத்துவர் கலைவாணன் மற்றும் மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகியோர் சிகிச்சையை மேற்பார்வையிட்டனர்.

ஆனாலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. அதன் உடற்கூறு ஆய்வில், யானையின் வயிற்றில் 15 மாத வளர்ச்சி அடைந்த குட்டி இருந்ததும், அத்துடன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளும், புழுக்களும் இருந்ததும் கண்டறியப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் யானையின் வயிற்றில் இருந்து இருப்பது, வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருவதையும், வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது என வன ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

யானை கீழே படுத்துவிட்டது என்றால் துப்பிக்கையை வைத்து தடுக்கும். ஆனால் தும்பிக்கையை தூக்கக் கூட முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் செவ்வாய்க்கிழமை யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களோடுதான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம்: கே. என். நேரு

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இடையில்தான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம் என்றார் திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு.புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

துணை வேந்தர்கள் நியமனம்: சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை!

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டதாக நெல்லைய... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி

விழுப்புரம் மாவட்டம், அரசூர் மலட்டாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி சகோதரிகள் இருவர் உள்பட மூவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூரைச் சேர்ந்த பழனி... மேலும் பார்க்க

செங்கல் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சரிட... மேலும் பார்க்க

ரெய்டு நடப்பதைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.நீ... மேலும் பார்க்க