செய்திகள் :

கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

post image

கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் நகர மாவட்டத்தின், அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்கி ஒன்றில் நேற்று (மே 20) வாடிக்கையாளர் ஒருவருடன் அந்த வங்கியின் பெண் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகியது.

அந்த விடியோ பதிவில், எஸ்பிஐ வங்கியின் மேலாளர், ‘நான் உறுதியாக கன்னடத்தில் பேசமாட்டேன், ஆனால் ஹிந்தியில் பேசுவேன்’ எனக் கூறுவது பதிவாகியுள்ளது.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் வாடிக்கையாளர்களுடன் பேச வேண்டும் என்பதை அந்த நபர் மேற்கொள்காட்டிய போதிலும் அவர் கன்னடத்தில் பேச தொடர்ந்து மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல கன்னட ஆர்வலர்கள் மற்றும் கன்னட இயக்கங்கள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த மேலாளர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் மேலாளரை எஸ்பிஐ நிறுவனம் இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது எக்ஸ் வலைதளப் பதிவில், எஸ்பிஐ-ன் உடனடி நடவடிக்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராம்மையா, அந்த மேலாளரின் நடவடிக்கைக்கு தனது கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது:

”அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்கியின் சூரிய நகர கிளை மேலாளர், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்த செயலானது கடும் கண்டனத்துக்குரியது. அந்த நிர்வாகியை உடனடியாக இடமாற்றம் செய்த எஸ்பிஐயின் நடவடிக்கைக்கு எங்களது பாராட்டுக்கள். இதனால், இந்த விவகாரம் இப்போது மூடிக்கப்பட்டதாகக் கருதப்படும்” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் நடைபெறக் கூடாது எனவும் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துவதுடன், உள்ளூர் மொழியைப் பேச முயற்சி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், அந்தப் பதிவில், மத்திய நிதி அமைச்சகத்தைக் குறிப்பிட்ட அவர் இந்தியா முழுவதுமுள்ள வங்கி ஊழியர்களுக்கு, கலாசாரம் மற்றும் மொழி உணர்திறன் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்: உயிர்த் தப்பிய பயணிகள்!

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் இன்று (மே 21) சேதமடைந்தது. எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அதிருஷ்டவசமா... மேலும் பார்க்க

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த க... மேலும் பார்க்க

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ... மேலும் பார்க்க

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க