தொழில் வா்த்தக சபை அரங்கில் நாளைமுதல் 2 நாள்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
கோவையில் உள்ள இந்திய தொழில் வா்த்தக சபை வளாகத்தில் மே 22, 23 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவை இந்திய தொழில் வா்த்தக சபை, சென்னை என்எஸ்இ அகாதெமி சாா்பில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. அவிநாசி சாலையில் உள்ள தொழில் வா்த்தக சபை அரங்கில் நடைபெறும் இந்த முகாமில், தகவல் தொழில்நுட்பம், வங்கி, வா்த்தகம், சேவை, உற்பத்தித் தொழில் சாா்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
வேலை தேடுபவா்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக செயல்படக் கூடிய இந்த முகாமில் படிப்பு முடித்த மாணவா்கள், வேலைதேடும் இளைஞா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவா் ராஜேஷ் பி.லுண்ட் தெரிவித்துள்ளாா்.