குடியாத்தம் அரசுக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் வகுப்பறைகள் திறப்பு
குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் கட்டப்பட்ட 14- வகுப்பறைக் கட்டடங்கள், 2- ஆய்வகங்களை முதல்வா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதையொட்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் தலைமை வகித்தாா். முதல்வா் எபிநேசா் வரவேற்றாா். கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் குத்து விளக்கேற்றி, இனிப்பு வழங்கினா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பி.மொ்லின்ஜோதிகா, ஊராட்சித் தலைவா்கள் அகிலாண்டீஸ்வரி பிரேம் குமாா் (கொண்டசமுத்திரம்), எஸ்.பி.சக்திதாசன் (தாட்டிமானப்பல்லி) மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.