செய்திகள் :

பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 பேர் காயம்!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் அந்தப் பள்ளிக்கூட பேருந்தைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரையில் பெறுப்பேற்கவில்லை. படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலானது தற்கொலைப் படை மூலமாக நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உள் துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், அப்பாவி குழந்தைகளைக் குறிவைக்கும் மிருகங்களுக்கு எந்தவொரு கருணையும் காட்டப்படக் கூடாது, எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனிநாடாக உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி பலூச் போராளிகள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு

விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

உலகின் எந்த பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக் கூடிய கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.ஏவுகணைத் தாக்குதலில் இரு... மேலும் பார்க்க

உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொலை!

ஸ்பெயின் நாட்டில் உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சின், அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர் அண்டிரி போர்ட்னோவ். ஸ்பெயின் தலைநகர் மே... மேலும் பார்க்க

காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க போப் வலியுறுத்தல்!

காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார். வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவும... மேலும் பார்க்க

சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். சிந்து மாகாணத்தின் நௌஷாரோ ஃபெரோஸ் மாவட்டத்தில், சிந்து நதிய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது.இந்த அணை கட்டப்பட்டுவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் மற... மேலும் பார்க்க

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே அணிந்து வந்த சட்டை சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவானது ஒவ்வொரு ஆண்டும் தி... மேலும் பார்க்க