Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன...
அரசுக் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்
வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளையும், குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரியில் கட்டடப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டத்தில் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.33 கோடியில் 6 வகுப்பறைகள், 2 கழிவறைகளும், வேலூா் முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் ரூ.5.28 கோடியில் 10 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 2 கழிவறை கட்டங்களும், புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.2.50 கோடியில் 6 வகுப்பறை கட்டடங்களும் கட்டப்பட உள்ளன.
இதற்கான கட்டுமான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பங்கேற்று பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்த குமாா், கோட்டாட்சியா் செந்தில் குமாா், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் மேகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.