பாப்லோ நெரூதா: ஒரு கவிதையாகப் பிறந்த நகரமும்… காதலாக வாழ்ந்த கவிஞனும்… கடல் தாண்...
தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாளர் கடிதம்
தில்லி - மும்பை இடையிலான போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் இதுவரை பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றான பிளே-ஆஃப்ஸுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இன்னும் ஒரு இடத்துக்கு மட்டும் போட்டி நிலவுகிறது.
இன்றிரவு மும்பை வான்கடேயில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் - தில்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 4-வது இடத்தைப் பிடிக்கும் என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், இன்றிரவு வான்கடேயில் போட்டி நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுஒருபுறமிருக்க தில்லி அணியின் உரிமையாளரான பார்த் ஜிண்டால், இந்தப் போட்டியை மும்பையில் இருந்து வேறு கிரிக்கெட் திடலுக்கு மாற்ற வேண்டும் என்று பிசிசிஐக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தில்லி - மும்பை இடையிலான ஆட்டம், அதிகாரபூர்வமற்ற காலிறுதி போன்ற போட்டியாகும். இந்தப் போட்டி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாய்ப்பிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான போட்டி பெங்களூருவில் இருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்தப் போட்டியையும் மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மும்பையை அச்சுறுத்தும் மழை: பிளே-ஆஃப் செல்லப்போவது யார்?