"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?
சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியுள்ளார்.
22 வயதாகும் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் 2022-இல் அறிமுகமானார். பேபி மலிங்கா எனப்படும் இவர் 31 ஐபிஎல் போட்டிகளில் 46 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இவர் தற்போது சரியாக பந்துவீசுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடைசி 10 ஐபிஎல் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் 5 போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் அதிகமான ரன்களையும் வழங்கியுள்ளார்.
அதிகபடியான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தோம்
இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறியதாவது:
மதீஷா பதிரானா மீது அதிகபடியான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தோம். அதனால்தான், அவரை அணியில் தக்கவைத்தோம்.
மதீஷா பதிரானா சிறிது காலமாக ஃபார்மில் இல்லாமல் இருந்து தற்போதுதான் ஓரளவுக்கு மீண்டு வந்துள்ளார்.
சில மேம்பாடுகளை செய்திருந்தாலும் அவர் நினைக்கும் அளவுக்கோ அல்லது நாங்களோ எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. அதனால், பதிரானா தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பழைய மாதிரி பந்துவீசுவதில்லை
ஃபார்முக்கு திரும்பினால் அவருக்கும் சிறிது தன்னம்பிக்கை பிறக்கும் என நினைக்கிறேன்.
தற்போது மதீஷா பதிரானாவை விடவும் பேட்டர்கள் நன்றாக விளையாடும் காலத்தில் இருக்கிறார். அவரிடம் இருந்து ஏற்கனவே உச்சத்தை பார்த்திருக்கிறோம்.
மதீஷா பதிரானா தனது முதல்கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் என்ன செய்தாரோ அதெயெல்லாம் திரும்பவும் கவனித்து செயல்பட வேண்டும்.
அவர் பந்துவீசும் முறை தனித்துவமானது. ஆனால், தற்போது அவரால் அந்தமாதிரி வீச முடிவதில்லை என்றார்.