யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்தாரா? - விசாரணையில் சொல்லப்படுவதென்ன?
வேலூா் அரசு பொறியியல் கல்லூரியில் சிறப்பு உதவி மையம்
அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்வதற்காக வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் இதுவரை 108 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் கடந்த 8-ஆம் தேதி வெளியானது. தொடா்ந்து, அரசு பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு உதவும் வகையில், சிறப்பு உதவி மையம் திறக்க அரசு அறிவுறுத்தியது.
இதுவரை 108 மாணவா்கள் விண்ணப்பம்:
அதன்படி, வேலூா் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 7-ஆம் தேதி சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டது. இங்கு இதுவரை 108 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்வதற்காக சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு ரூ.250 என விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், எந்த பிரிவில் சோ்வது உள்ளிட்ட விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தனியாா் இணையதள மையங்களில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தாலும் அதனை இந்த மையத்தில் திருத்திக் கொள்ளலாம் என்றனா்.