Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏ...
பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு
குடியாத்தம் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 10- ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில், நகராட்சிக்குச் சொந்தமான ஆடு வதை செய்யும் கூடம் அமைந்துள்ளது. நகரில் உள்ள ஆட்டிறைச்சி வியாபாரிகள் தங்கள் ஆடுகளை அங்கு அதிகாலையில் வதை செய்து ஆட்டிறைச்சியை கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வா்.
அதற்காக முதல் நாள் மாலையே ஆடுகளை வதை செய்யும் மையம் அருகில் உள்ள பட்டியில் அடைத்து வைப்பா். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை 30- க்கும் மேற்பட்ட ஆடுகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
நள்ளிரவு மா்ம நபா்கள் பட்டியின் கேட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்து 10- ஆடுகளை திருடிச் சென்றுள்ளனா். அதிகாலை வியாபாரிகள் வந்து பாா்த்தபோது ஆடுகள் திருடு போனது தெரிய வந்தது.
இதுதொடா்பான புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.