செய்திகள் :

M.K.Stalin: `இது கட்சி நிகழ்ச்சி இல்லப்பா' டு முன்னரே குளித்த யானைகள் வரை - ஊட்டி பயண நிகழ்வுகள்

post image

மே - 12 பிற்பகல்: தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க தமிழக விருந்தினர் மாளிகைக்குக் காங்கிரஸ் நிர்வாகிகள் மூவருடன் வந்த ஊட்டி எம்.எல்.ஏ கணேசனை காவல் துறையினர் அனுமதிக்க மறுக்கவே, ஒருவழியாக எம்.எல்.ஏ., மட்டும் அனுமதிக்கப்பட்டார்.

மே - 13 மாலை: தமிழக முதல்வர் ஸ்டாலின் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பயணித்த நிலையில் மசினக்குடி - தெப்பக்காடு சாலையோரக் குழிகள் அவசர அவசரமாகச் செப்பனிடும் பணி நடைபெற்றது.

மே - 13 : வன விலங்குகள் நடமாடக்கூடிய அடர் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் சராசரியான இடைவெளியில் கொட்டிய மழையிலும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்ததை முதல்வர் கவனித்தாரா எனத் தெரியவில்லை.

மே - 13 : தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் வழக்கமான சீருடையில் வழக்கத்திற்கு மாறாக ஒரே மாதிரியான ஷூ அணிந்திருந்தனர்.

மே - 13 : முதல்வர் ஸ்டாலினின் வருகையையாெட்டி வழக்கத்திற்கு மாறாக வளர்ப்பு யானைகள் வெகு நேரத்திற்கு முன்னதாகவே குளிக்கவைக்கப்பட்டு, உணவு வழங்கும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால் யானைகள் ரெஸ்ட் லெஸ் ஆக காணப்பட்டன.

மே - 13 : தெப்பக்காடு யானைகள் முகாமில் நிறுத்தப்பட்ட முதல்வர் பயணித்த வாகனத்தில் இருந்த தேசியக் காெடியை காவலர் ஒருவர் கழற்றிவிட்டு கட்சி காெடியைப் பாெறுத்தினார்.

மே -13 : ஏதோ நியாபகத்தில் கட்சிக் காெடியை வாகனத்தில் பாெறுத்தியதை கவனித்த மற்ற காவலர்கள், இது கட்சி நிகழ்ச்சியில்லை என சொல்ல சுதாரித்துக் காெண்டு இரண்டு கொடிகளும் கழற்றப்பட்டன.

மே - 14 : முதல்வர் ஸ்டாலின் காலை 7.30 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திறந்த வெளி மைதானத்தில் வாக்கிங் செல்ல ஏற்பாடுகள் தீரவிரமாக நடைபெற்று வந்தன, முதோல் ஹவுன்டு இன மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிருந்தது.

மே - 14 : சைக்கிளில் வந்த சிறுவர்கள்கூட, மைதான வளாகத்திற்குள் சைக்கிள் காெண்டு செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு மைதானத்திற்குள் வந்தனர்.

மே - 14 : சுமார் 11 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை ஆய்வு செய்ய வருவதாகத் தகவல் பரவிய நிலையில், அரசு மருத்துவக்கல்லுாரியை சீருடையணியாத காவல் துறையினர் சுற்றிவளைத்திருந்தது சினிமாவை விஞ்சும் வகையில் இருந்தது.

மே -14 : மாலை முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் தொட்டபெட்டா மலைச் சிகரத்தை காண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தநிலையில் சுமார் 3.30 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது, 3.52 மணிக்கு டிக்கெட் கவுன்ட்டர் மூடப்பட்டு காெட்டும் மழையில் சுற்றுலாப் பயணிகள் கட்டாயப்படுத்தி காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர் .

மே - 14 : விகடன் இ மேகசினில் ஒளிபரப்பப்பட்ட https://www.facebook.com/share/v/16MHamVRbB/ இந்த லைவ் வீடியாே பரவ, சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டாலும், வெறுமென டிக்கெட் கவுன்ட்டரை போலீசார் திறக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மே - 15 : புகழ் பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

மே - 15 : திறந்து வைத்தபோது அணிந்திருந்த உடை மேடைக்கு வரும்போது மாறியிருந்தது. சொல்லப்போனால் ஊட்டியில் இருந்த 5 நாள்களும் உடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தியதாகவே தெரிகிறது.

மே - 15 : தமிழக முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உடன் வந்த இளம் பெண் யார் என்ற கேள்வி பலதரப்பினரிடம் எழுந்தது, அது தான் பூங்குழலி, தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க தமிழரசு மகள்.

மே - 16 : முதல்வர் ஸ்டாலின் காலை 7.30 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திறந்த வெளி மைதானத்தில் இரண்டாவது முறையாக வாக்கிங் சென்று திரும்பும்பாேது தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த தாெடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அளித்த மனுவை பெற்றுக்காெண்டார்.

மே - 16 : தமிழக விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க அனுமதி பெற்று அதிகாலை முதல் காத்திருந்த தாெண்டர்களை, பெரும் கெடுபிடிகளுக்குப் பிறகு சிறு சிறு குழுக்களாக முதல்வரைச் சந்திக்க காவலர்கள் அனுமதித்தனர்.

மே - 16 : ஒருகட்டத்தில் 11.30 மணியளவில் கான்வாய் கிளம்ப, நுழைவு வாயிலில் இறங்கிய முதல்வர், காத்திருந்த தொண்டர்களுடன் கைகுலுக்கியும், புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினார்.

Trump: `கோல்டன் டோம்' `விண்வெளியில் இருந்து தாக்கினால்கூட...'- ட்ரம்ப் அறிவித்த புதிய ராணுவ தளவாடம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ராணுவத்தில், 'கோல்டன் டோம்' என்கிற அதிநவீன ராணுவ தளவாடம் ஒன்றைச் சேர்க்கவுள்ளார். இதன் மொத்த மதிப்பு கிட்டதட்ட 175 பில்லியன் டாலர். ஆரம்பகட்டமாக, இந்தத் தளவாடத்திற்கு ... மேலும் பார்க்க

யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்தாரா? - விசாரணையில் சொல்லப்படுவதென்ன?

பாகிஸ்தானின் முதன்மை உளவு அமைப்பான ISI-க்கு உளவு பார்த்ததாக 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் ஒருவர்.ஜோதி மல்ஹோத்ராதற்போது 5 நாள... மேலும் பார்க்க

வெடித்த வன்கொடுமை விவகாரம்; தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி ... மேலும் பார்க்க

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' - விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன... மேலும் பார்க்க