செய்திகள் :

குடிபோதையில் தாயை மிதித்தேக் கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

post image

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,

நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச சேர்ந்தவர் ஓமனா (85). இவரின் மகன் மணிகண்டன். இவர் தினமும் குடிப்பதும், இரவில் தன் தாயிடம் வந்து பிரச்னை செய்வதும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார் மணிகண்டன். அளவுக்கு மீறிய குடிபோதையில் இருந்ததால் தனது தாயாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அவரை காலால் மிதித்ததில் பலத்த காயங்கள் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஓமனாவின் உடலில் பல எலும்பு முறிவுகள் காணப்பட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தீவிர சிகிச்சையாக்கப்பட்டும் ஓமனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, வட்டப்பாரா நிலைய போலீஸார் மணிகண்டனை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த க... மேலும் பார்க்க

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ... மேலும் பார்க்க

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க