செய்திகள் :

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

post image

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் கரோனா நிலைமையைச் சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகின்றது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் மும்பையில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இருவர் பலியாகியுள்ளதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஒருவருக்கு ஹைபோகால்சீமியா வலிப்புடன் கூடிய நெஃப்ரோடிக் நோயும், மற்றவருக்கு புற்றுநோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.

ஜனவரி முதல் மொத்தம் 6,066 பேருக்கு கரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் 106 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 101 பேர் மும்பை, புணே, தாணே மற்றும் கோலாப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தற்போது 52 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளதாகவும் அவர்களின் உடல்நலத்தை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

குடிபோதையில் தாயை மிதித்தேக் கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச சேர்ந்தவர் ஓமனா (85). இவரி... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

ரெனால்ட் நிறுவனம் மே மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரெனால்ட் தற்போது விற்பனை அதிகரிக்கும் நோக்கில் ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை! - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: ஹரியாணா பேராசிரியருக்கு ஜாமீன்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சோ்ந்த இணை பேராசிரியா் அலி கான் முகமதுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.பாகிஸ்தான் பயங்கர... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் கைது!

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை சர்வதேச எல்லையைத... மேலும் பார்க்க

பொற்கோயிலுக்குள் வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதா? ராணுவம் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பொற்கோயிலுக்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான செய்தியை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.அதேபோல், பொற்கோயிலின் கூடுதல் தலைமை பூசாரி மற்றும் ச... மேலும் பார்க்க